次の方法で共有


விண்டோஸ்-7 (in Tamil)

 

2001ல் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு மென்பொருளை வெளியிட்டது. மைக்ரோசாப்ட். மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த மென்பொருளைத் தொடர்ந்து விஸ்டாவை வெளியிட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ்-7 எனும் புதிய ரக சாஃப்ட்வேரை உலகெங்கிலும் வியாழக்கிழமை (இன்று) அறிமுகப்படுத்தியுள்ளது.

My Idea TV Commercial - Collaboration

உலகிலுள்ள கம்ப்யூட்டர்களில் 90 சதவீதம் பேர் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேரைப் பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனத்தின் புதிய சாஃப்ட்வேர் குறித்து ஏற்கெனவே சோதனை அடிப்படையில் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது. இது சிறப்பாகச் செயல்படுவதாக கருத்துகள் வெளியானதைத் தொடர்ந்து இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

7 Second Demos: Faster Wake-up

இப்புதிய சாஃப்ட்வேர் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. விரைவாக இயங்குவதோடு, டச்-ஸ்கிரீன் வசதிகளையும் உள்ளடக்கியது. விஸ்டா அறிமுகமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இது சந்தைக்கு வந்துள்ளது. விஸ்டா சாஃப்ட்வேர் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இப்புதிய சாஃப்ட்வேர் அமையும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

7 Second Demos: Preview

""கடந்த 10 ஆண்டுகளில் வெளியான சாஃப்ட்வேரில் மிகச் சிறந்த தயாரிப்பாக இது அமையும்,'' என்று கம்ப்யூட்டர் ஆய்வாளர் பிரெண்டன் பார்னிக்கிள் கூறினார். விஸ்டா வெளியீடு மூலம் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருந்த சரிவு, இதன் மூலம் ஈடுகட்டப்படும் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லாபத்தில் 50 சதவீதம் விண்டோஸ் சாஃப்ட்வேர் விற்பனை மூலம் கிடைக்கிறது. அந்த வகையில் இப்புதிய தயாரிப்பு மிகச் சிறந்த பங்களிப்பை அளிக்கும் என நம்புவதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்தார்.

Comments

  • Anonymous
    October 22, 2009
    நன்றாக உள்ளது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.